இலங்கையின் நிலைமையே ஏற்படும்! அவுஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார நிலைமை ஏற்படும் என அவுஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் முதனிலை செல்வந்த பெண் எனப் போற்றப்படும் Gina Rinehart என்பவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செல்வந்தப் பெண்ணின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 31 பில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளைப் போன்று அவுஸ்திரேலியாவும் சௌபாக்கியத்திலிருந்து வறுமை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலவசமாக பொருட்களை வழங்கியும், வரியை அறவீடு செய்தும் சுபீட்சமாக இருந்த இலங்கை இன்று பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது எனவும் தற்பொழுது மக்கள் பட்டினியை எதிர்நோக்கி வருவதாகவும், பேச்சு சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும், மக்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் எதிர்காலம் தொடர்பிரலான நூல் ஒன்றில் இலங்கை மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளின் வீழ்ச்சியை ஒப்பீடு செய்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Gina Rinehart கனிய வளத்தொழிற்துறையில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri