அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க எவ்வித சாத்தியங்களும் கிடையாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கையும், அவுஸ்திரேலியாவும் இணைந்து செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
படகு மூலம் செல்ல முயற்சி
அண்மைய நாட்களில் சில இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து அங்கு குடியேறுவதற்கு பூச்சிய வாய்ப்பே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுளளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா பிரவேசித்த எவரும் நாட்டில் குடியேற வாய்ப்பு கிடையாது எனவும், ஏதிலி அந்தஸ்து வழங்கப்படாது எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.