திலகரத்ன தில்சானின் மகளின் ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை அணி
மலேசியாவில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் சூப்பர் சிக்ஸ் 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்த இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்ன தில்சானின் மகள் லிமான்சா திலகரத்ன இலங்கை அணிக்கு உதவியுள்ளார்.
இலங்கையை 99 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பிறகு, அவுஸ்திரேலிய அணியால் அந்த எண்ணிக்கை வீழ்த்த முடியவில்லை.
ஓட்ட வித்தியாசம்
இந்த நிலையில், 87 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து ஆட்டத்தில் 12 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய மகளிர் அணி தோல்வி கண்டது.

இந்தப்போட்டியில் லிமான்சா, ஒரு விக்கட்டை கைப்பற்றியதுடன் 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்களை பெற்றதன் அடிப்படையில் ஆட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை, இலங்கை தேசிய மகளிர் அணியில் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்துவின் மகள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan