கடல் எல்லையில் நுழையும் எந்த கப்பலும் சோதனையிடப்படும்..!
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களைத் தொடர்ந்து சோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையுடன் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்
முன்னதாக, ஜனவரி 28ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில் 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டபோது, இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இந்தியா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், ஊடக சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், இலங்கை கடற்படை,இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடத்தல், மனித கடத்தல், சட்டவிரோத கடற்றொழில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலை எதிர்த்து 24 மணி நேரமும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனைகள் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், இலங்கை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய, குறித்த தரப்பினர் அனுமதித்தால் எந்த மோதல்களும் இருக்காது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
