நடுவானில் திடீரென தடுமாறிய சர்வதேச விமானம்! பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்
அவுஸ்திரேலியாவில் இருந்து நியுசிலாந்திற்கு பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (11.3.2024) திங்களன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.58 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சம்பவத்தில் 50 பயணிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிட்னியிலிருந்து அவுக்லாண்ட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தி நடுவானில் திடீரென விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானம் தடுமாறத் தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனை
இதனால் விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் ஏற்றப்பட்டனர்.
எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பயணிகளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.