இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு
இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கனிய வள ஆய்வு நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலீயுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான மாது ஓயாவுக்கு அருகிலுள்ள சதுப்பு நில அமைப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசின் உதவியைப் பெறுவது குறித்து கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
