இலங்கையில் இருந்து சென்ற நான்கு படகுகளை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
இலங்கையில் இருந்து கடந்த மாதம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றி ந்த நான்கு படகுகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைப்பற்றியதாக அந்நாட்டு கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த படகுகளில் வந்த 125 பேரை தாம் பொறுப்பேற்று நாடு கடத்தியதாகவும் அவுஸ்ததிரேலிய கரையோர பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாதத்தில் அதிகளவான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஒரே தடவையில் பிடிப்பட்டது இதுவே முதல் முறை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் குடியேற்றம் மற்றும் தேச எல்லை சட்டங்களில் எந்த தளர்வும் ஏற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலிய சமஷ்டி அரசு தெரிவித்துள்ளது.
இதனால், அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாதிகள் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் கூறியுள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
