இலங்கை செல்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுங்கள்! அவுஸ்திரேலியா எச்சரிக்கை
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை நேற்று வெளியிட்டுள்ள திணைக்களம், இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வதற்கான உங்கள் தேவையை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் இப்போது உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இலங்கையில் உள்ள தமது குடிமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.
இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகளின் உத்தரவுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
எல்லா நேரங்களிலும் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவை போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும். எரிபொருள் விநியோகத்தில் இடையூறு மற்றும் திட்டமிட்ட, நீண்ட மின்சார தடைகளை நீங்கள் சந்திக்கலாம்.
சில மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு உங்களை பாதிக்கலாம் என்றும் அவுஸ்திரேலியா தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam