மக்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க வழங்கப்பட்டுள்ள பறக்கும் கண்காணிப்பு கருவிகள்
இரண்டு நாடுகளுக்கும் இடையில் மக்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க அவுஸ்திரேலியா - இலங்கை பொலிஸாருக்கு ஐந்து "ட்ரோன்" பறக்கும் கண்காணிப்பு கருவிகளை பரிசளித்துள்ளது.
கூட்டு ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் ஒப்பரேஷன் தளபதி ரியர் அட்மிரல் மார்க் ஹில் இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து செயல்படுவதால், படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கும், கடத்தல்காரர்களுக்கும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கும் பாரிய தடைகளை ஏற்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரியில், அவுஸ்திரேலிய ஏவியேஷன் ஒரு "ட்ரோன்" முன்மாதிரி ஒன்றை உருவாக்கியது.
இது முக்கியமான சம்பவங்களை பதிவு செய்வதற்கும், காட்சிகளை
மீண்டும் கப்பலுக்கு அனுப்புவதற்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.



வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam