வெளிநாட்டு நிறுவனங்களின் எரிபொருள் விநியோகம்! அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள காலம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பதாக அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று(28.04.2023) மெய்ந்நிகர் ஊடாக விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கு கடந்த மார்ச் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
Completed an online negotiation meeting with United Petroleum, Australia this morning to discuss Fuel sales agreements, Govt policy, logistics & time line for commencement of operations in SL. United Petroleum will communicate the dates of commencement during the next week.… pic.twitter.com/37qbhqTEQ7
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 28, 2023
அதற்கமைய சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் எரிபொருள் விநியோகம் குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் மே மாதத்தில் கையெழுத்திடப்படவுள்ளதுடன் 45 நாட்களுக்குள் அதன் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மெய்நிகர் சந்திப்பில்,மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, மத்திய வங்கி , முதலிட்டு சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.