இங்கிலாந்தை கட்டுப்படுத்தி ஏஷஸ் கிண்ண தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியா அணி, தொடரை 3க்கு பூச்சியம் என்ற அளவில் வெற்றி கொண்டுள்ளது.
இன்று முடிடைந்த மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஏஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களை பெற்றது
இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 68 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்தநிலையில் சிறப்பாக பந்துவீசிய அவுஸ்திரேலிய அணியின் ஸ்கொட் போலன்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார்.








நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
