அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும்!விடுக்கப்பட்டுள்ள கால அவகாசம்
2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பல தடவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

அரசியல் கட்சிகள்
இதுவரை 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் இன்று முதல் 14 நாட்களுக்குள் அதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (23)
கலந்துரையாடல் ஒன்றை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri