யாழ்.மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு விசேட வேலைத்திட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (23.05.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ், அரச நிறுவனங்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் 256 கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இணையாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களை உள்ளடக்கிய வகையில் 30 சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.
விசேட வேலைத்திட்டம்
இந்த வேலைத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், சுற்றுலாப் பணியகம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச அரச நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட்டன.
தூய்மையான மற்றும் அழகான நாட்டில் வாழ்வதற்கு அனைவரும் விரும்புகின்ற நிலையில், இந்த இலக்கை வெற்றிகரமாக அடைவது இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.

பொறுப்புள்ள நபர்களாக எமது கடமையைச் செய்யத் தவறினால், சிறந்ததொரு எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியாது எனவும், இதற்கு அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியமானது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த மாபெரும் கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன, 51 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam