சரத்பொன்சேகாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்
தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவது போல் பொன்சேகாவுக்கும் அதே பதிலடி தருவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் எவராயினும் தமிழர்களால் விரட்டப்படுவார் என சரத் பாென்சேகா கூறிய கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக இன்று (23) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.
தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவர் என ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இக்கருத்துக்கு நீங்கள் கூறுவது சரியானது தான் பொன்சேகா, ஆனால்
உங்களுக்கும் நாங்கள் அதே பதிலடிதான் தருவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
