பிணையில் விடுதலையானார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா(Video)
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 2 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்து இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைவாக அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கடந்த 7ஆம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இன, மதங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



