ஜனக ரத்நாயக்கவின் மனுக்களுக்கு சட்டமா அதிபரிடமிருந்து ஆட்சேபனை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரிப்பதற்கு சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டண திருத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இந்த மனுக்கள் பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (19.07.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற விசாரணை

இந்நிலையில் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக அமைச்சர்கள் சபை உறுப்பினர்கள் குறிப்பிடப்படவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிசக்திக்கு பொறுப்பான அமைச்சர் பிரதிவாதியாக பெயரிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam