உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆராய குழு அமைத்தார் சட்டமா அதிபர்
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு தொடர்பில் இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் சட்டமா அதிபர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
குறித்த தீர்ப்பை ஆய்வு செய்வதற்காக இரண்டு அதிகாரிகளை அவர் நியமித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் எதிர்கால நடவடிக்கை
இந்த அதிகாரிகள், குறித்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த கப்பல் ஏற்படுத்திய அழிவு தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர், இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வதற்கு பதிலாக, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் எக்ஸ் - பிரஸ் பேர்ல் குழும நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எடுத்த முடிவு நியாயமற்றது என்று உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
அத்துடன், அந்த முடிவு பகுத்தறிவற்றது மற்றும் தன்னிச்சையான முடிவு என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

மேலும், கப்பல் நிறுவனம் முதல் கட்டமாக, நட்டஈடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        