புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவையொன்றினை அமைத்து தருமாறுக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Protest Batticaloa R.Sanakkiyan Sathasivam Vijayanthiran
By Kumar Oct 17, 2021 03:38 PM GMT
Report

மட்டக்களப்பு -  கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிரதேச புகையிரத கடவை பாதையில் இன்று காலை ஒன்று கூடியவர்கள் கையில் சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே, புகையிரத திணைக்கள அதிகாரிகளே, எமது மீன்பிடி வீதியினை அடைத்து வைக்காமல் திறந்து விடவும், எமது வழமையான பாதையினை திறந்து விடவும்' என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

பறங்கியாமடு மீனவர் கிராம மக்கள் தமது போக்குவரத்தினை வழமையான கடற்கரை வீதியினால் புகையிரத பாதையின் குறுக்காக கடந்து மேற்கொண்டு வந்திருந்தனர்.

கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்தோர்கள், வியாயபாரிகள் என பலரும் தமது கடற்றொழில் சார்ந்த நடவடிக்கையில் ஈடுப்பட இவ் வீதியினையே பயன்படுத்தினர்.

குறித்த பாதையானது கடற்கரைக்கு செல்வதற்கு குறுகிய தூரமாக காணப்பட்டதனால் போக்குவரத்திற்கு இலகுவாக காணப்பட்டது. தற்போது 5 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (Sathasivam Vijayanthiran), நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Sanakkiyan) போன்றோர்களிடம் தெரிவித்த போதிலும் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்று தருவதாக கூறிச் சென்றுள்ளனர்.இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே புகையிரத வீதியினை போக்குவரத்திற்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பறங்கியாமடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US