பருத்தித்துறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி கடற்தொழிலாளர் கூட்டுறச்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணி, கொட்டடி மீன் சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகர சபையை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டோர், "அகற்று அகற்று மண்ணை அகற்று பருத்தித்துறை நகர சபையே மண்ணை அகற்று” ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு நகர சபை வாசலை சென்றடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திறகு வருகை தந்திருந்தனர்.
பொலிஸார் வருகை
பரீட்சை நிலையம் அருகில் இருப்பதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு பொலிஸார் போராட்டக்காரர்களை வேண்டிக் கொண்டனர். இதனை அடுத்து போராட்டக்காரர் அமைதியாகினர். தவிசாளரை வருமாறு கோரினர்.

சற்று நேரத்தில் தவிசாளர் நகரசபை வருகைதந்ததை அடுத்து தவிசாளர் போராட்டக்காரருடன கலந்துரையாடினர். மணலை அகற்றாமைக்கான காரணத்தை கேட்டு போராட்ட காரர்கள் வாக்குவாதப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்புத் திணைக் களத்தின் அதிகாரிகளை இன்று (18) நகர சபைக்கு அழைப்பதாகவும் இதன் போது கடத்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை வந்து கலந்துரையாடி அதில் எடுக்கப்பட முடிவுக்காக மணலினை அகற்ற முடியும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

