ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் முறையான சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.




ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
