ஜனாதிபதியின் சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை: விமல் குழுவினர் அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பத்து கட்சிகளைச் சேர்ந்த தலா இரண்டு பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எவ்வாறெனினும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.