போராட்டம் நடத்தும் உரிமையை அடக்க முயற்சித்தால் நிலைமை மேலும் மோசமாகும்:ஐ.நா
காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஊடகவியலாளர் உட்பட அனைவருக்கும் எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து கவலையடைவதாக கொழும்பில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் கூறியுள்ளார்.
போராட்டங்கள் தொடர்பில் ஆராய செய்தியாளர்களுக்கு உரிமையுண்டு
Gravely concerned by use of force to disperse protestors.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) July 22, 2022
Journalists and human rights defenders have a right to monitor demonstrations and their functions should not be impeded. pic.twitter.com/iqcXvzNtEC
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்போர் போராட்டங்கங்கள் தொடர்பாக ஆராய உரிமை இருப்பதாகவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காலிமுகத்திடல் போராட்டகாரர்களை கலைக்க பலத்தை பயன்படுத்தியமை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியாக போராட்டத்தை நடத்தும் உரிமையை அடக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை மேலும் மோசமான நிலைமைக்கு செல்லும் எனவும் ஹெனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Very concerned about reports from the Galle Face protest site. We have made clear the importance of the right to peaceful protest
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) July 21, 2022
அதேவேளை அமைதியான எதிர்ப்புகளில் ஈடுபட இருக்கும் உரிமைகளை பாதுகாப்பது குறித்து பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் தெரிவித்துள்ளார்.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல தரப்பினர் இன்று நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர்.