சவுதி இளவரசர் மீது தாக்குதல் முயற்சி: சமூக ஊடக பதிவால் பெரும் பரபரப்பு
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை(Mohammed bin Salman Al Saud) கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த விடயமானது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் மொசாட் ஆயுதப்படை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்,
கொலை முயற்சி
'' ரியாத்தில் உள்ள அறிக்கை... பின் சல்மான் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்" என பதிவொன்றை மேற்கொண்டுள்ளது.
REPORT IN RIYADH:
— Mossad Commentary (@MOSSADil) May 6, 2024
Bin Salman survives an assassination attempt.
எனினும் சவுதி தரப்பில் இருந்து இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ''Open-source intelligence defender என்ற அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,
தெற்கு காசா
'' சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான படுகொலை முயற்சி தொடர்பாக இன்றிரவு செய்யப்பட்ட "உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள்" முற்றிலும் தவறானவை.
நகரத்திற்குள் அல்லது அதற்கு அருகில் இன்றிரவு எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை.
After speaking with several Residents of Riyadh and an Individual who is associated with the Saudi Royal Guard Regiment; they have Confirmed that the “Unconfirmed Reports” made earlier tonight regarding an Assassination Attempt against Saudi Crown Prince, Mohammed bin Salman are…
— OSINTdefender (@sentdefender) May 6, 2024
தெற்கு காசாவில் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கை தொடங்கும் வேளையில் தாக்குதல் தொடர்பான ஆரம்ப பதிவுகள் மத்திய கிழக்கு ஊடக ஆதாரங்களை இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது." என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |