யாழில் முன்னாள் தவிசாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (01.08.2023) இடம்பெற்றுள்ளது.
காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் க.பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் குறித்த பகுதிக்கு அவரே நேரடியாக நேற்று காலை சென்றுள்ளார்.
இதன்போதே காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் வடக்கு மாகாண பிரதம செயலாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதம செயலாளர் உத்தரவிட்டதுடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் தவிசாளரிடம் பிரதம செயலாளர் உறுதியளித்தார்.
கடந்த ஐனவரி மாதத்தில் மக்கள் நலன் கருதி சபைநிதி மூலம் சக்கலாவோடையில் நவீன முறையில் மீன் சந்தை அமைக்கப்பட்டும் இதுவரை ஒருசில வர்த்தகர்களின் தூண்டுதலால் மீன் வியாபாரிகள் புதிய மீன் சந்தைக் கட்டடத்திற்கு வருவதைத்தவிர்த்து வருகிறார்கள் எனவும் பிரதம செயலாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
