பொலிஸ் அதிகாரியொருவர் மீது தாக்குதல் முயற்சி! முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
அவிசாவளை அருகே பாதுக்கை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கை, மாவத்தகம அருகே ரிடிகஹஹேன பிரதேசத்தில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோதல்
இதன் போது குடிபோதையில் இருந்த கார் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாவக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்பின் முக்கியஸ்தருமான நபரொருவர் பொலிஸ் நிலையத்துக்கு நேரில் வருகை தந்து கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு கோரி அழுத்தம் கொடுத்துள்ளார்.
எனினும் பொலிசார் அதற்கு மறுப்புத் தெரிவித்த போது குறித்த நபருக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கைது
இதன்போது போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தோள்பட்டை நட்சத்திரம் கழன்றுள்ளதுடன், குறித்த அதிகாரியும் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் தனக்கு சுகவீனம் என்று தெரிவித்து பொலிஸ் தடுப்புக் கூண்டில் மயங்கி வீழ்ந்த நிலையில் தற்போது பொலிஸ் காவலுடன் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
