சிறீதரன் எம்.பியின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டது இராணுவத்திற்கு காணியை பாரதீனப்படுத்தும் முயற்சி
கிளிநொச்சி நகரில் உள்ள நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள, தாம் கையகப்படுத்தியுள்ள காணிகளை தமக்கு பாரதீனப்படுத்துமாறு இராணுவத்தினர் விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான எதிர்ப்பு இன்றைய தினம் இடம்பெற்ற கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வைத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரச திணைக்களங்கள் ஒவ்வொன்றும் இராணுவத்தினருக்கு பாரதீனப்படுத்த வேண்டிய காணிகள் தொடர்பில் பரிசீலித்த வேளையிலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எந்த நகரத்திலும் இல்லாதவாறு ஏற்கனவே கிளிநொச்சியில் பல காணிகளை இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது.
மாவட்ட செயலகத்துக்குள்ளேயே இராணுவம் காணியின் ஒரு பகுதியை சுவீகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு நகருக்குளேயே பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.
எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என சிறீதரன் எம்.பி விடாப்பிடியாக இருந்ததை தொடர்ந்து இராணுவத்திற்கு பாரதீனப்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படாமல் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.









கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
