இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீண்டும் மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம்
இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விடயத்தில் தமிழகத்திற்கு சாதகமான நிலையே ஏற்படும். இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
