உதய கம்மன்பிலவை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி - சிக்கலில் மஹிந்த
எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பு கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இவ்வாறு குற்றச்சாட்டி அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உதய கம்மன்பில தற்போதுவரையில் கட்சியின் பிரதானிகளுடன் பல்வேறு கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரும் வரை அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மோதலை ஏற்படுத்திக் கொண்ட தலைவர்கள் கம்மன்பில மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
எப்படியிருப்பினும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு வாழ்க்கை செலவு குழுவினால் அனுமதி வழங்கப்பட்டு, நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமைச்சர் கம்மன்பிலவை தொலைபேசியில் தொடர்ப்புக் கொள்ள முயற்சித்த போதிலும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அமைச்சர் தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
You May Like This...

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
