தமிழர் பகுதியில் புத்தர் சிலை வைக்க தொடர் முயற்சி- அரசிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை
வவுனியா - ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அந்தக் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட குழுவினர் ஓமந்தை பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வொன்றை செய்துள்ளார்.
புத்தர் சிலை அமைத்தல்
இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரசங்குளத்தில் பொலிஸ் நிலையத்தின் பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் காணியும் கட்டிடங்களும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் அங்கு செல்லாமல் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

தற்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியிலேயே பொலிஸ் நிலையம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மேலதிக காணியையும் ஆக்கிரமித்தால், ஓமந்தை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் வி. சஞ்சுதன், பிரதேச சபை உறுப்பினர் க. பிரதீபன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மா மற்றும் மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். தவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிராக உடனடி சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பகுதியாக காசா மற்றும் மேற்குக் கரை: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம் News Lankasri