யாழில் காணி சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Erimalai Jun 06, 2025 10:03 AM GMT
Report

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அரச காணியை தனி நபருக்கு சுபீகரிக்கும் முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிய வருவதாவது, தனியார் நிறுவனத்திற்கு தாளையடி பகுதியில் அரச காணியினை அளக்க முற்பட்ட வேளை ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.

கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்

கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்

பொலிஸாரின் உதவியுடன்

இதன்போது குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் கிராம அலுவலர், சமூக மட்ட அமைப்புகளோடு மீண்டும் கலந்துரையாடி தமது திட்டத்தின் பயன்களை எடுத்துக் கூறி கிராம மக்களின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதாக கூறிச் சென்றுள்ளனர்.

யாழில் காணி சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு | Attempt Acquire Land Jaffna

எனினும், இன்றுவரை கலந்துரையாடலை மேற்கொள்ளாத நிலையில் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் நில அளவைத் திணைக்களத்தினருடன் மிகவும் இரகசியமாக அரச காணியை அளப்பதற்காக தாளையடி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் கிராம மட்ட அமைப்புகளின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன் போது நில அளவைத் திணைக்களத்தினர் தாங்கள் பொலிஸாரின் உதவியுடன் வந்து மீண்டும் இந்த இடத்தை அளவீடு செய்வதாக கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த முயற்சி எமது பிரதேசத்தில் எடுக்கப்பட்ட போது அதனை நாங்கள் முற்றாக தடுத்து நிறுத்தினோம்.

எனினும், நாங்கள் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம அலுவலர் உடன் கலந்துரையாடி இந்தத் திட்டத்தால் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தோம்.

திட்டத்திற்கு முற்றாக தடை

இதற்கான கலந்துரையாடலை அவர்கள் ஒழுங்கு செய்வார்கள் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நேற்று முற்பகல் 10:30 மணி அளவில் நில அளவை திணைக்களத்தினருடன் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் எமது பிரதேசத்தின் நிலப்பரப்பை அளவீடு செய்வதற்காக வருகை தந்தார்கள்.

அங்கு வந்திருந்த நில அளவை திணைக்களத்தினர் அதிகாரிகளுடைய அனுமதியுடன் தான் அங்கு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் இது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது இதற்கு நாங்கள் ஒரு கலந்துரையாடல் இல்லாமல் அனுமதி வழங்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தோம்.

யாழில் காணி சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு | Attempt Acquire Land Jaffna

எமது பிரதேசத்தில் பல குடும்பங்கள் புதிதாக திருமணம் முடித்து காணி அற்று இருக்கிறார்கள்.

அவர்களுக்கு காணி பகிர்ந்து கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் பிரதேச செயலகத்தால் எடுக்கப்படவில்லை.  எமது பிரதேசத்தில் இருக்கின்ற அரச காணிகள், வனஜுவராசிகள் திணைக்கள காணிகள் தொடர்பான வரைபடத்தை எங்களுக்கு தருமாறு பிரதேச செயலரிடம் கூறி இருந்தோம்.

ஆனால் அவர் இன்று வரை தரவில்லை.  நில அளவை திணைக்களத்தினருக்கும் பிரதேச செயலருக்கும் ஒரு கடிதம் கையளித்திருக்கிறோம்.

எமது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் கூறியது போன்று எங்களது மக்களுடன் கலந்துரையாடாமல் இதனை அளவீடு செய்ய முயற்சித்ததால் நாங்கள் இந்த திட்டத்திற்கு முற்றாக தடை விதிக்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்! பயணிகளிடத்தில் கடும் பதற்றம்

கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்! பயணிகளிடத்தில் கடும் பதற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US