குவைத் விமான நிலையத்தை இலக்குவைத்து சரமாரி தாக்குதல் - இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சு, இந்த தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை
மேலும், அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன் ஆகியவை இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.

எனவே அனைத்து தரப்பினரும் உச்சபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு வலுவாக ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.