பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
குவைத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து ஈரானிய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜோஹர் ஹயாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், நாட்டின் இரண்டு பிரதான மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த "குற்றவியல் தாக்குதல்" காரணமாக ஆலைகளுக்கு கடுமையான பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு மின் உற்பத்தி அலகுகள் முற்றாகச் செயலிழந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்கள்
முன்னதாக நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் காரணமாக, ஷுவைக் எண்ணெய் துறை வளாகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருந்ததுடன், அரச அலுவலக வளாகம் ஒன்றிற்கும் கணிசமான சேதங்கள் விளைவிக்கப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்கள் பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிப்பது குறித்து குவைத் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri