வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18ஆவது மைல் பிரதேசத்தில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (15) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்துகள் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் திடீரென பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன
எனினும், அதில் பிரயாணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை .
இதனையடுத்து பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பேருந்துகளில் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா




