யாழ். வடமராட்சியில் இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம் நிதர்சன் (21) என்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களை CID எனக் கூறிய 10 பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள்.
அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென கேட்டதாகவும், நாங்கள் முள்ளியானை சேர்ந்தவர்கள் எங்களுக்கு தெரியாதென கூறியதும் சுந்தரலிங்கம் நிதர்சன் என்பவர் மீது கொடூர தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல்கள்
அத்துடன் கை விலங்கிட்டு வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று காடு காடாக தாக்கியதாகவும், தாங்கள் தாக்கியதாக வெளியில் கூற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
தொலைபேசியை பறித்த குறித்த குழு மதுபானம் கேட்டதாகவும், மதுபானம் வாங்கி கொடுத்த பின்பே தொலைபேசியை ஒப்படைத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பத்து பேரில் தாக்கிய ஒருவர் மதுபோதையில் தன்னுடைய தொலைபேசி நம்பரை கொடுத்து சென்றுள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அப்பாவி பொதுமக்கள் மீது CID என கூறி கொடூரமான தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உரியவர்கள் இதற்கு தீர்வு காணவேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |