மட்டக்களப்பில் இளைஞன் மீது தாக்குதல் : ஒருவர் கைது
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியால் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றது தொடர்பாக ஏற்பட்ட சண்டை காரணமாக இடம்பெற்ற தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், தாக்குதலை மேற்கொண்ட 30 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ்கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைனனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியிலுள்ள குறுக்கு வீதியால் சத்தமாக இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு இடம்பெற்ற சண்டையினை தொடர்ந்து குறித்த இளைஞனை அவனது தந்தை அங்கிருந்து மீட்டு வீட்டிற்கு செல்லும் போது பின்னால் வந்தவர்கள் அந்த இளைஞன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையடுத்து அவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |