முல்லைத்தீவில் கிராம அலுவலகர் மீது தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஒயா பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கிராம அலுவலராக பணியாற்றும் கிராம அலுவலகர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கிராம அலுவலகர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மேலதிக சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெனகபுரம் வெலிஓயாவில் வசிக்கும் கிராம சேவையாளர் வெலிஓயா பிரதேசத்தின் கீழ் உள்ள 5 ஆம் வட்டாரத்தில் கடமையாற்றி வருகின்றார்.
இவர் நேற்று முன்தினம்(03.01.2022) அலுவலகத்தில் கடமையில் இருந்த வேளை அலுவலக எல்லைக்குள் வேறு ஒரு பொது மகனினால் வைக்கப்பட்ட பொருள் ஒன்றினை தனக்கு தருமாறு வலியுறுத்திய பொதுமகனுக்கு குறித்த பொருளினை வழங்க மறுத்த நிலையில் பொதுமகன் கிராம அலுவலகர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் கண்டனம்
இந்த தாக்குதலில் பாதிப்படைந்த கிராம அலுவலகர் வெலிஓயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை (04.01.2023) கிராம அலுவலகர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அவரை கைது செய்யகோரியும் கிராம அலுவலகம் முன்னால் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலாளி என சந்தேகிக்கப்படும் நபரை வெலிஓயா பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தி வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
