நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாக நான் சுடப்பட்டேன்: உத்திக எம்.பி விசனம்
நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகதான் தான் சுடப்பட்டதாக நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (19.09.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தவறான சமூக அமைப்பு
மேலும், இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன், இந்த முறை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், இந்த முறை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

அத்துடன் நமது நாட்டின் சமூக அமைப்பு தவறாக உள்ளது எனவும், அரசியலும் தவறு உள்ளது எனவும் அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri