அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பெலோசி, வீட்டில் ஊடுருவிய ஒருவரால் சுத்தியலால் தாக்கப்பட்டார்.
இதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
82 வயதான பெலோசி, தலை மற்றும் வலது கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகநபர் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர், சபாநாயகர் நான்சி பெலோசியைப் பார்க்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது.
கொலை முயற்சி
இந்த நிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தாக்குதலுக்கான எந்த உள்நோக்கமும் தெரியவில்லை. தாக்குதலின் போது வோஷிங்டனில் இருந்த நான்சி பெலோசி - தனது கணவரை மருத்துவமனையில் பார்க்க விமானம் மூலம் திரும்பினார்.
பெலோசி முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நான்சி பெலோசியின் பேச்சாளர் ட்ரூ ஹம்மில் கூறியுள்ளார்.
சீனா கடும் ஆட்சேபனை
சன் பிரான்சிஸ்கோ காவல்துறைத் தலைவர் வில்லியம் ஸ்கொட்டின் தகவல்படி, சம்பவம், வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, சந்தேக நபரான டேவிட் டிபேப், ஒரு சுத்தியலால், பெலோசியை தாக்குவதை கண்டனர்.
சந்தேக நபரை அதிகாரிகள் சமாளித்து நிராயுதபாணியாக்கினர். அவர் பெலோசியை "நான்சி வீட்டிற்கு வரும் வரை" கட்டிவைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் "நான்சி எங்கே?" என்று சத்தமிட்டுள்ளார்.
நான்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், தாய்வானுக்கு சென்றதும், சீனா
அதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
