கல்லுண்டாயில் இளைஞன் மீது தாக்குதல்! தேடி வந்தவர் மீது கத்திக்குத்து
யாழிலிருந்து கல்லுண்டாய் வழியாகச் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது இன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த இளைஞன் கடமை முடித்து கல்லுண்டாய் வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து அராலியில் இருந்து வருகை தந்த ஒருவரை அராலி பாலத்தடியில் வைத்து குறித்த நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.
சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri