யாழில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரின் வீட்டில் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து நடாத்திய தாக்குதலில் அவரின் தந்தை காயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (12.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேட்பாளரின் வீட்டிற்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்துள்ளது.
வாள் வெட்டு தாக்குதல்
இதனையடுத்து, வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய கும்பலை சேர்ந்தோர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
மேலும், அயல் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞனின் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri