வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இளைஞர்கள் குழு அட்டகாசம்
வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15.09) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலைக்கு வெளியே நின்ற 10ற்கும் மேற்பட்டவர்களை கொண்ட இளைஞர் குழு அவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்து நிற்கும் நிலைமை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றதாகவும், அவர்களால் குழு மோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும்,பொலிஸாரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்