இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இளைஞர்கள்
காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஹோட்டலில் விருந்தில் இருந்த 2 இலங்கையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது.
சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் ஒரு காரில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களின் தடுத்து, பின்னர் தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்ட ஜெர்மன் பிரஜைகள் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையர்கள் கைது
சந்தேக நபர்களும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 26 வயதுடைய ரூமஸ்ஸல பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் சுற்றுலா தொழிலிலும் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் தாக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
