யாழில் புடவைக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
யாழில் (jaffna) புடவைக்கடை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவமானது யாழ்ப்பாணம் - நெல்லியடி (Nelliaddy) பகுதியில் உள்ள புடவைக்கடை மீதே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே, புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் - நெல்லியடி இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் நெல்லியடி நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |