ஜேர்மனியில் கூரிய ஆயுதத்தினால் மக்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கி சூடு
ஜேர்மனியில்(Germany) ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியில் அமைந்துள்ள தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில்(Mannheim) உள்ள மத்திய Marktplatz சதுக்கத்தில் வலதுசாரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நபர் ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கூரிய ஆயுத்தினால் தாக்கியுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம்
குறித்த நபரின் தாக்குதலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் காலிலும், பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்திலும் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர் மீது மற்றொரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் அல்லது நோக்கங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்கள் பற்றி தெரிவிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |