யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், குருநகர் - சிறுத்தீவுப் பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் (17.07.2023) சென்று பொழுதைக் கழித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டைப் பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அதனால் கடலட்டைப் பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதில் 7 மாணவர்களும், கடலட்டைப் பண்ணை உரிமையாளர் ஒருவரும், பண்ணை பணியாளர் ஒருவருமாக 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
