யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றையதினம்(13) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடு
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri