இஸ்ரேலை உலுக்கிய ஈரானின் ட்ரோன்கள்! ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும். இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இராணுவ நடவடிக்கை
நியூயார்க்கிற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர தூதுவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conducted on the strength of Article 51 of the UN Charter pertaining to legitimate defense, Iran’s military action was in response to the Zionist regime’s aggression against our diplomatic premises in Damascus. The matter can be deemed concluded. However, should the Israeli…
— Permanent Mission of I.R.Iran to UN, NY (@Iran_UN) April 13, 2024
அந்த பதிவில்,சட்டப்பூர்வ பாதுகாப்பு தொடர்பான ஐ.நா.சாசனத்தின் 51 வது பிரிவின் வலிமையின் அடிப்படையில் ஈரானின் இராணுவ நடவடிக்கையானது, டமாஸ்கஸில் உள்ள எமது இராஜதந்திர வளாகத்திற்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு விடையிறுப்பாகும். விவகாரம் முடிவுக்கு வந்ததாகக் கருதலாம்.
இருப்பினும், இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும்.
இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.