ஈரான் மீதான தாக்குதல்கள்: கதிர்வீச்சு பாதிப்புகள் ஏதுமில்லை என சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதி
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அணுசக்தி நிலையங்களில் கதிர்வீச்சு கசிவு அல்லது பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) நேற்று தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த இடங்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA உறுதிப்படுத்தியுள்ளது.
நிதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

அணுசக்தி நிலையங்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கதிர்வீச்சு ஆபத்து இல்லை என்றும் சர்வதேச சமூகத்திற்கு அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri