காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் தொடர்பான தீர்ப்பு
கொழும்பு, காலிமுகத்திடலில் கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின்
சந்தேகநபர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோட்டை
நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று (17.01.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிவான், பிறப்பித்துள்ளார்.
மேலும், குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்றும், அதற்கான கோப்பு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 36 சந்தேகநபர்களில் 30 பேர் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 17 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
