காஷ்மீரில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது தாக்குதல்: 9 பேர் பலி
காஷ்மீரில் (Kashmir) உள்ள சிவகோரி கோவிலுக்கு பக்தர்கள் சிலர் ஒரு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த போது, திடீரென பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (09.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பேருந்து மீது தாக்குதல் நடத்திய போது அதன் ஓட்டுனர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆரம்பிக்கப்பட்ட விசாரைணைகள்
இந்த சம்பவத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்தத் தாக்குதலில் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையை மேற்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri